செப்.9.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.