பிப்.9.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்ற நிகழ்வின் போது ஒரு கோட் அணிந்திருந்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசிய போது அணிந்திருந்த கோட் பற்றிய தகவல்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த கோட் கரூரில் தயாரானது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையை நிறைய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
எனினும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து நூல் தயாரித்து அதிலிருந்து கோட் தயாரிக்கும் பணியை கரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுசெய்து வருகிறது. மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை கரூர் நிறுவனம் தயாரிப்பது பற்றி அறிந்த இந்தியன் ஆயில் நிறுவனம் பிரதமருக்கு அணியும் கோட்டை தேர்வு செய்து கரூர் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்தது. கலரையும் தேர்வு செய்து கொடுத்து கரூர் நிறுவனத்தில் தயாரித்து அனுப்பப்பட்டது. இந்த கோட் சில்லரை விலையில் 2000 ரூபாய் என அதன் உரிமையாளர் தெரிவித்தார். பிரதமருக்கான உடை என்பதால் இதுவரை இது பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.