ஆக6.
அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தில் சேலம் ரயில்வே கோட்டத்தில் கரூர் ரயில் நிலையம் தேர்வாகியுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் கள், ரயில்வே நிலைய முன்பக்க சீரமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் ரூ. 34 கோடியில் கரூர் ரயில் நிலையத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கரூர் ரயில் நிலையத்தில், ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். முன்னதாக மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், சக்திவேல் முருகன், கோபிநாத், மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு, உள்ளிட்ட காங்கிரஸ் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.