அக்.20.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பாஜக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சியினரை நான் வாழ்த்துகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்றார்.
ஊரக தேர்தல்களில் 381பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் முதன்முறையாக ஒன்றிய கவுன்சிலர்கள் ஆக தேர்வு பெற்றவர்கள் 8 பேர். பஞ்சாயத்து தலைவர்கள் 41பேர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 332 பேர்.
நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விபி துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு பெற்ற உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.