. பிப்.25
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் இரண்டாவது நாளாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் . செர்னோபில் அணு உலையை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. தலைநகரில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயில சென்றவர்கள் சிக்கியுள்ளனர்.
என்னைக் கொல்ல சதி
ரஷ்யாவின் சீர்குலைவு சக்திகள் தங்கள் நாட்டில் புகுந்துள்ளனர். உக்ரைன் அரசியல் தலைமையை அழிக்க சதி நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் என்னை அழிப்பதன் மூலம் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா கருதுகிறது. எப்படி அச்சுறுத்தினாலும் துன்புறுத்தினாலும் நாட்டை விட்டு நான் போக மாட்டேன். என அந்நாட்டின் அதிபர் ஷெலன்ஸ்கி வீடியோ பதிவில் பேசியுள்ளார்.