தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் கடந்த ஏப்ரலில் 59 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. வெங்கடாச்சலம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. வெங்கடாச்சலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். அம்மம்பாளையத்தில் உள்ளவீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.