மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சரும் , கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி ட்விட்டரில்கூறியிருப்பது-
எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.