காவல்துறையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளாகி வருபவர்கள் கரூரில் பணிபுரிந்தவர்கள் அதிகம் சிக்குகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் இவர் கரூரில் எஸ் ஐ யாக இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.
குஜராத் பதிவு எண் கொண்ட காரில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் குட்காவை கடத்தி என்று விற்பனை செய்யும் தகவல் கிடைத்ததும் கரூர் அருகே அவர்கள் கைது செய்யப்பட்டு குட்கா பறிமுதல செய்யப்பட்டது. எதிரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கணக்கு காட்டாதது தெரிய வந்தது இதனை அடுத்து. டிஐஜி அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பப்பட்டார். தவிர இரண்டு சப்இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வெவ்வேறு மாவட்டங்களுக்கு தூக்கி அடித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்..
இந்த வரிசையில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் போட்டோ கேட்டு பெண்ணிடம்: செல்போனில் ஜொள்ளு விட்ட இன்ஸ். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் வாங்கல் காவல் நிலையத்துக்கு சொந்த பிரச்னை காரணமாக இளம்பெண் புகார் கொடுக்க வந்தபோது அவரிடம் செல்போன் நம்பரை இன்ஸ்பெக்டர் வாங்கி பின்னர் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி ஜொள்ளு விட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் எனக்கு போட்டோ மட்டும் செண்ட் பண்ணுங்க என வாட்ஸ் அப் கால் ரெக்கார்டு செய்ய முடியாது என நினைத்து அந்த பெண்ணை இன்ஸ்பெக்டர் வாட்ஸ் அப் காலில் அழைத்து உள்ளார். ஆனால், அந்த பெண் மற்றொரு செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருச்சி சரக டிஐஜி வருண்குமார், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.