ஏப்.29.
திருட்டு வழக்கில் குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை கரூர் மாவட்ட எஸ்.பி. பாராட்டினார். மேலும் கோடை காலத்தில் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டம், கரூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட K.A.நகர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 28.04.2024 ஆம் தேதி இரவு சுமார் 12.00 மணியளவில் செந்தில்குமார், 42. என்பவர் நடத்திவரும் கோழிக்கடையின் வசூல் முடித்து தனது செல்போனில் அலாரம் வைத்துவிட்டு, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோடை காலம் என்பதால் உஷ்ணத்தின் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் செல்போனில் அலாரம் பார்க்க முயற்சித்தபோது செல்போனை காணவில்லை என்றும், தேடி பார்த்தபோது தனது வீட்டின் கதவு திறந்திருந்தது, நகைகள் திருட்டுப் போனது குறித்து 28.04.2024 ஆம் தேதி காலை 00.15 மணிக்கு செந்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் 1) நாகராஜன், 21/24, , வேலுச்சாமிபுரம், கரூர். 2) ஜீவா, 28/24, K.வேலுசாமிபுரம், கரூர். 3) கிருபா ஜோயல், 25/24, வெங்கமேடு, கரூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் கைது செய்து திருடப்பட்ட தங்கம், வெள்ளி நகைகள், செல்போன் ஆகியவற்றை திருட்டு நடந்த 12 மணி நேரத்திற்குள் கரூர் நகர உட்கோட்ட டி.எஸ்.பி. மேற்பார்வையில் குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட நகைகளை மீட்டு, எதிரிகள் மூவரும் 28.04.2024 அன்றே 21.00 மணிக்கு கரூர் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதற்காக போலீசாருக்கு எஸ்.பி. முனைவர் பிரபாகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் கோடைகாலம் என்பதால் வெப்பத்தின் காரணமாக வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டின் வெளியே தூங்க வேண்டாம். தங்களது உடைமைகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும், கோடை காலங்களில் விடுமுறைக்கு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் தங்களது வீடுகள் காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்படும் என கரூர் மாவட்ட எஸ்.பி. முனைவர் K.பிரபாகர் தெரிவித்துள்ளார்.