ஜன.28.
என்.சி.சி. பொதுக்கூட்டம் டெல்லி கரியப்பா பரேட்மைதானத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி என்சிசி அணிவகுப்பை பார்வையிட்டார். என்சிசி 75வது ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். கடந்த 75 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்த என்சிசி வீரர்களின் அர்ப்பணிப்பு மன உறுதியை பிரதமர் பாராட்டினார். பிரதமர் பேசுகையில், இன்று உலகின் பார்வை நம் நாட்டை நோக்கி இருக்கிறது. இதற்கு மிகப்பெரிய காரணம் இந்தியாவின் இளைஞர்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையில் நமது பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஏதாவது காரணத்தை கூறி நாட்டை பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவை வெற்றி பெறாது என்றார்.