மார்ச்.24.
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை (ஆறு நாட்டார் மலை) அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் 27 ம்தேதி கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
கோயில் புதுப்பிக்கப்பட்டு எண் மருந்து சாற்றி குடமுழுக்கு பெருவிழா வருகின்ற 27.03.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு இன்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. யானை, குதிரைகள், பசு ,ஒட்டகம் முன் செல்ல நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் பக்தர்கள் வெள்ளம் போல் திரண்டு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.