பிப்.28.
கரூர் மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA)-ன் படி முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகள் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கைவிரல் ரேகை பதிவு செய்வதை 31.03.2025-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே PHH/AAY குடும்ப அட்டைகள் வைத்துள்ள, இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.