ஜன.28.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தினை இன்று அமைச்சர்கள் அர.சக்ரபாணி,வி.செந்தில் பாலாஜி திறந்து வைத்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் இராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) அண்ணாதுரை, மோகன், இயக்குநர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கலெக்டர் தங்கவேல், எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் துறை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், சேலம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 16 KL பெட்ரோல் 22 KL டீசல் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் பங்க் 1214.78 சதுர மீட்டர் பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் குளித்தலை-மணப்பாறை ஆகிய ஊர்களுக்கிடையேயான மாநில நெடுஞ்சாலையில் அய்யர்மலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனால், இச்சாலையில் பயணம் செய்யக்கூடிய வாகனங்கள், பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக வளாகம் முழுவதும் CCTV கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும். நைட்ரஜன் (N2) வாயு இணைப்புடன் கொண்ட காற்று ஏற்றும் இயந்திரம், தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் HP Razer ஆகிய எரிபொருட்கள் மற்றும் ஆயில் விற்பனைக்கு உள்ளது. வரும் காலங்களில் வாகனங்களுக்கு தேவையான ஆயில்கள் DEF (Diesel Exhaust Fluid) மற்றும் பெட்ரோலிய சேர்க்கைப் பொருட்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்திகழ்ச்சியில் மண்டல மேலாளர் உணவு . மற்றும் நுகர்வோர் துறை முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரு.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.