பிப்.24.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் வருகின்ற. 08-03-2025-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள இருப்பதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குளித்தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு,கிருஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் அரவக்குறிச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 01-03-2025 முதல் 07-03-2025 வரையிலான தேதிகளில் பணியில் உள்ள நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வுக்கு எடுத்து கொள்ளபடுகிறது. இந்த அமர்வு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில்(Meeting Hall) பிற்பகல் 3.00 மணி முதல் 5.30 வரை இயங்கும். சந்தேகம் இருப்பின் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்:04324-296570 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நீதிபதியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான R.சண்முகசுந்தரம் கேட்டுக்கொள்கிறார்.