ஜன.14.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ளது பூலாம் வலசு கிராமம் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டுஇங்கு நடைபெறும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானது. தமிழகம் முழுவதும் இருந்து சேவல் கட்டு நிகழ்ச்சிக்காக சேவல்களை கொண்டு வந்து களத்தில் விடுவார்கள். நான்கு நாட்கள் சேவல் கட்டு நிகழ்ச்சியை கண்டு களிப்பார்கள். தோற்றுப் போகும் சேவலை வெற்றி பெற்ற சேவல் உரிமையாளருக்கு கொடுத்து விடுவர். இந்த சேவல் கோச்சை என்று அழைக்கப்படும் கறி விருந்திற்கு பயன்படுத்தப்படும். இந்த சேவல்கள் விற்பனைக்கும் வரும் 15 ஆயிரம் வரை விலை கொடுத்தும் வாங்குவார்கள். சேவல் கட்டுக்கு சேவல்களை கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, உள்ளிட்ட ஊட்டச்சத்து தானியங்களை உணவாக கொடுத்து வளர்ப்பார்கள் . கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சேவலுடன் வருவார்கள்.
சேவல் கட்டிற்கு பிரச்சினை ஏற்பட்டு அவ்வப்போது நடத்துவதும் அனுமதி மறுக்கப்படுவதுமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு சேவல் கட்டு நடத்துவதற்கு வழக்கு தொடரப்பட்டதால் அனுமதி இல்லை. சேவல்கட்டுக்காக மைதானம் பூலாம்வலசு கிராமத்தில் தயாராக இருந்தும் போலீசார் நடத்த தடையை விதித்துள்ளனர். இதனால் வெளியூர்களிலிருந்து சேவல் உடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் சேவல்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.