பிப்.8.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. இருகூர்,செஞ்சுடையாம் பாளையம் பகுதியில் கன்றுக்குட்டி நாய்களை இழுத்துச் சென்று குதறி உள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மற்றும் அதிகாரிகள் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு அமைத்து பார்வையிட்டனர் .
மேலும் வனத்துறை காவலர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். தனியார் பேப்பர் அட்டை மில் அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து அப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு செய்து பிடிக்கும் பணியில் வனத்துறை காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் மூன்று நாட்களுக்கு மேலாக சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.