ஜன.27.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் பச்சை கொடி காண்பித்து குடமுழுக்கு விழாவை துவக்கி வைத்தனர்.
16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
பழனி கோயில் குடமுழக்கு விழா மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்புகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 26 , 27 மற்றும் பிப்ரவரி 3, 4,,5 தேதியில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 12 .30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பழனியில் இருந்து மதுரைக்கு பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சேரும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சோழவந்தான், கொடைக்கானரோடு, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் இன்று செல்லும் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.