மார்ச்.3.
கரூர் மாவட்டத்தில் கரீப் நெல் கொள்முதல் பருவம் 2024-2025ல் விவசாயிகள் நலன் கருதி விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடப்பு சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு 14கொள்முதல் நிலையங்களில் மொத்தம் 9495 டன் நெய் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.20,77,45,816 (ரூபாய் இருபது கோடியே எழுபத்து ஏழு இலட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து எண்ணூற்று பதினாறு) நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது கரூர் மாவட்டத்தில் குளித்தலை வட்டம் வளையபட்டி, கல்லடை, கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரராக்கியம், கட்டளை, மேட்டுமகாதானபுரம், வளையக்காரன்புதூர், கோவக்குளம். அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம், புகளூர் வட்டம் அஞ்சூர், மண்மங்கலம் வட்டம், மொச்சக்கொட்டாம்பாளையம் ஆகிய இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பஞ்சமாதேவியில் விரைவில் திறக்கப்பட்ட உள்ளது. மேற்கண்Procureme முறையில் விவசாயிகளிடமிருந்து ளாக நெய் (கிரேடு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- கரும் பட்ச ஆதார விலைய் ரூ.2320/-தொகை ரூ.130/-) பொது ரக ரெம் ரூ.2405/-க்கும் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2300/ ஊக்கத் தொகை ரூ.105/-) நெல் கொள்முதல் செய்யப்படுகிறதுகரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நோடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நிலையத்தில் விற்பனை செய்ய கிராம நிர்வாக அலுவலர் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ,2. ஆகியவற்றுடன் நேரில் சென்று கைரேகை பதிவு செய்து தாங்கள் விளைவித்த நெல்லினை விற்பனை செய்து பயன் அடையுமாறும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய விவசாயிளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற விற்பனையாளர்களோ, இடைத்தரகர்களோ, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனைக்கு அனுமதியில்லை. வியாபாரிகள் நடமாட்டம் இருப்பின் புகார் தெரிவித்திட கட்டணம் இல்லா தொலைபேசி எண்.1800 5993 540 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்திடுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.