ஆக.16.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் மரகதப் பூஞ்சோலைகளை திறந்து வைத்தார்.
இத்திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில் உள்ளூர் மக்களின் உள்ளார்ந்த பங்கேற்புடன் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில். அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு இதுவரை மொத்தம் 75 எண்ணிக்கையிலான மரகதப்பூஞ்சோலைகள் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் 75 மரகதப்பூஞ்சோலைகளை காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இத்திட்டத்திற்காக 19.75கோடி. ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம். பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு கிராமத்திற்க்கு ரூ.23.824/- இலட்சம் என்ற விகிதத்தில் மூன்று கிராமங்களுக்கு ரூ.71.472/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மரகதப்பூஞ்சோலையும் வருவாய் துறை நிலங்களில் ஒரு ஹெக்டர்பரப்பில் வனத்துறையால் உருவாக்கப்பட்டு இரண்டு வருட பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அந்தந்த கிராம ஊராட்சிகளிடம் தொடர் பராமரிப்பு செய்யும் பொருட்டு ஒப்படைப்பு செய்யப்படும். மூன்று மரகதப்பூஞ்சோலைகளிலும் மொத்தம் 2064 எண்ணிக்கையிலான தடி மரங்கள் மற்றும் பழ மரங்கள், மருத்துவ தாவர மரங்கள் நடவுசெய்யப்பட்டு, ஆழ் துளை கிணறு அமைத்து பூங்காவில் ஆங்காங்கே அமரும் நீள சாய்வு மேசைகள், பார்வையாளர் அமரபகுதி நிரந்தரச்கூடம், நடைபாதைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மரகதப்பூஞ்சோலைகள். தமிழ்நாடு அரசின் தனித்துவமான முன்னெடுப்பாக பிரதிபலிப்பதுடன், கிராம மக்களுக்கு ஒரு பொழுது போக்கு. புவிசமநிலைபடுத்தும் இடமாகவும். உயிரினங்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான உணவுகளான பழம். தீவனம், தண்ணீர், தடிமரம் தருவதுடன் எதிர்காலத்தில் காலநிலை மாற்றப் பாதுகாப்பு சூழலை கிராமங்களுக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்கவில் மர இனங்களான ஆல், அரசு, அத்தி, நாவல், நெல்லி, நீர்மருது, பாதம், இலுப்பை, வில்லம், விளாம், பூவரசு, கொய்யா, மா, மகிழம், புன்னை, கொடுக்கா புளி, வேம்பு, புங்கன் முதலியன நடவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மரகதப்பூஞ்சோலைகளில் தரகம்பட்டியில் அமைந்துள்ள மரகதப்பூஞ்சோலையை கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது பஞ்சாயத்து தலைவர் வேதவள்ளி, மாவட்ட GIGOT அலுவலர் சண்முகம், வட்டாட்சியர்.இளம்பருதி மற்றும் உடனிருந்தனர்.