டிச.21.
சென்னை வேப்பேரியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ஓ. பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில் , அதிமுக கட்சியை தினகரன் உடைத்த போது ஆட்சியை காப்பாற்றியது நான் தான். எனக்கு சோதனை ஏற்பட்ட போது எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா. கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்தி எக்கு கோட்டையாக மாற்றியவர் அம்மா. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பதை நீக்கி விட்டனர். இவர்களை நாடு மன்னிக்காது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொது செயலாளர் அது யாராலும் மாற்ற முடியாதது .
தலைமைக்கு வருபவர்களை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்ஜிஆர் கூறி சட்ட விதிகளை கொண்டு வந்துள்ளார். அதை யாராலும் மாற்ற முடியாது. எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இருந்தால் தனி கட்சி நடத்தி பார்க்கட்டும் . அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எம்ஜிஆரை எடப்பாடி நேரில் பார்த்து பேசியது உண்டா?. பொதுக்குழு நடைபெற்ற போது என்னை பங்கேற்க விடாமல் தடுக்க சதி செய்தனர். எடப்பாடி பொதுக்குழுவில் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அதிமுக வங்கி கணக்கில் 256 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. டெபாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியில் தான் கட்சி நடக்கிறது கட்சியை முறையாக பயன்படுத்தாவிட்டால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி நிதியிலிருந்து ஒரு இரண்டு கோடியை பெற்று என்னிடம் திருப்பிக் கொடுத்தவர் ஜெயலலிதா என்றார்.
கூட்டத்திற்கு பின்னர் ஓபிஎஸ் கூறியது-நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும். “ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். என்றார்.
எம் எல் ஏ மனோஜ் பாண்டியன் பேசுகையில் எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, ஓபிஎஸ்-ஸிடம் இருப்பது தான் தொண்டர் படை என்றார்.