டிச.29.
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகம், ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி, ஆத்தூர் பிரிவு சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் மற்றும் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இப்புறக்காவல் நிலையத்தை கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ் கான்அப்துல்லா தலைமையில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கரூர் நகர உட்கோட்ட டிஎஸ்பி செல்வராஜ், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
இப்புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் காவல்துறையை எளிதில் அணுகும் வண்ணம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள். மேலும் இப்பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவைகள் அனைத்தும் புறக்காவல் நிலையம் மூலம் கண்காணித்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.