மே.20.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக பட்டப்பட்ட 32 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி வட்டம். வேலம்பாடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை இன்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்டகலெக்டர் தங்கவேல் 30 பயணளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார். கரூர் எம்.பி. ஜோதிமணி. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், கரூர் மாவட்டம். அரவக்குறிச்சி வட்டம். வேலம்பாடியில் 0.165 ஹெக்டேர் பரப்பளவில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் (தரை மற்றும் 3 தளங்கள்) அனைத்தும் அடிப்படை வசதிகளுடன் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு 400 சதுரடி பரப்பளவில் ரூ.9.23 இலட்சம் மதிப்பீட்டில் படுக்கையறை, வரவேற்பறை. சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வசித்து வரும் வீடற்ற நகர்ப்புற ஏழைகள், பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடிநீர் வசதிக்காக வேலம்பாடி ஊராட்சியின் மூலமாக குடிநீர் இணைப்பும். ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அறையுடன் கூடிய தரைமட்ட தீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவு நீர்த்தொட்டி, வடிகால் வசதி மற்றும் தெருவிளக்குகள் ஆகிய உட்கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடுக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகர்மன்றத் தலைவர் முனவர் ஜான். தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் வாரிய நிர்வாகப் பொறியாளர் நாமக்கல்கோட்டம் தக்ஷகுமாரதுரை, உதவி நிர்வாக பொறியாளர் (கரூர் உட்கோட்டம்) தமிழரசு, உதவிப்பொறியாளர் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் கலந்துகொண்டனர்.