பிப்.22.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டம் மண்மங்கலம் மற்றும் கடவூர் பகுதிகளில் ரூ.3.82 மதிப்பீட்டிலான கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணாக்கர்களுக்கு இனிப்பு வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ முன்னிலை வகித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, கரூர் மாவட்டம் கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.211 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம், மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.3.82 கோடி மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பெறியாளர் கஜதா, உதவி செயற்பொறியாளர்.ரவீந்தரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம். வட்டாட்சியர் மோகன்ராஜ், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.