மார்ச்.6.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் டி.ராஜா திறந்து வைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார். சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். சுரேஷ்குமார். கரூர் மாவட்ட நிர்வாக நீதியரசர் கே.குமரேஷ் பாபு, கரூர் மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தார்கள். கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.ராஜலிங்கம். மாவட்ட ஆட்சித்தலைவர் டார்டர்.த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுத்தரவதனம் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும். வயதில் மூத்த வழக்கறிஞர்களை கெளரவப்படுத்தியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த வழக்கறிஞர் என்றால் தமிழ்நாட்டில் அட்வகேட் ஜெனரல், இந்திய அளவில் அட்டர்னி ஜெனரல் என்பார்கள். இந்த குளித்தலையில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. 19 நீதிமன்றங்கள் கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்தது இப்பொழுது திறக்கப்பட்ட இந்த கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்துடன் 20 நீதிமன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது.நான் பல மாவட்டங்களுக்கு நீதிமன்றங்களை பார்த்து வருகிறேன். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடிய மக்கள் இங்கு இருக்கிறர்கள். போக்சோ வழக்கு பல நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கிறது. கரூர் நீதிமன்றத்தை பொறுத்தவரை 19 போக்சோ வழக்குகள் மட்டும்தான் உள்ளது. நான் ஏற்கனவே கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக இருந்த போது 7 வழக்குகள் தான் இருந்தது. தற்போது உள்ள 13 வழக்குகளையும் விரைவாக மகிளா நீதிமன்றம் முடிக்க வேண்டும். அதன் மூலம் கரூர் மாவட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலத்திலேயே போக்சோ வழக்கு இல்லாத மாவட்டமாக இருக்கும். என்றார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவிக்கையில், இன்றைய சூழ்நிலையில் வழக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த எண்ணிக்கைக்கேற்ப தனித்தனியாக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு தேவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமான நிதியை வழங்குகிறார். அதேபோல மாண்புமிகு நீதியரசருக்குத் தெரியும். கோரிக்கைகளை எல்லாம் எவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமோ நிறைவேற்றி தந்து நீதித்துறை தமிழ்நாட்டிலேயே மிகச் சிறப்பாக செயல்படுவதற்கு நிச்சயமாக முதல்வர் தளபதியுடைய அரசு உறுதுணையாக இருக்கும். என்றார்.
இந்நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. .மாணிக்கம், குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் .K.S.M.சாகுல் அமீது. செயலாளர் நாகராஜன், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள். பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.