பிப்.20.
கோவை காந்திபுரத்தில், ஆம்னி பேருந்து நிலையம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவை காந்திபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட ₹2.95 கோடி மதிப்பிலான மாநகராட்சி ஆம்னி பேருந்து நிலையத்தை இன்று அமைச்சர் நேரு திறந்து வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் நீலகிரி, திருப்பூர் & ஈரோடு மாவட்டங்களுக்குட்பட்ட, நகராட்சி பகுதிகளில் ரூ.30.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 15 புதிய திட்ட பணிகளை துவக்கி வைத்து, பின்னர் ரூ.271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளை, இன்று கோவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, துவக்கி வைத்தனர். அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார். ஜி. கிரியப்பனவர், கோவை எம்.பி. கணபதி.பா.ராஜ்குமார், கோவை மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்திவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நடைபெற்றது. அமைச்சர் கேஎன்.நேரு தலைமை வகித்தார். அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, முத்துசாமி , சாமிநாதன், ராஜேந்திரன், டாக்டர். மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் செல்வகணபதி, பிரகாஷ், சுப்பராயன், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி. ராஜேஷ்குமார், எம்எல்ஏ ஈஸ்வரன், கலந்து கொண்டனர்.