பிப்.18.
கரூரில் ஜேசிஐ கரூர் டைமண்ட் (Open Turf) திறந்த தரை கிரிக்கெட் போட்டி ஃபோர்டி எலெவன் ஸ்போர்ட்ஸ், சேலம் பைபாஸ் சாலையில் உள்ள Turf மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 24 அணிகள் விளையாடின.
சூரியநாராயணன் AVS & AVR, துவக்கி வைத்தார். மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 60,000. பரிசளிப்பு விழாவில் டிஆர்ஓ. கண்ணன் , டாக்டர் ரஜினிகாந்த், பாலசுப்பிரமணி – CII சேர்மன், வெங்கடேசன், சுரேஷ், 10s ஸ்போர்ட்ஸ், வாசந்தன்ராமசாமி ஆகியோர் விளையாட்டு அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.சிறப்பித்தனர்.
பரிசுகள்:
• முதலாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கோப்பையை – Fire Drops அணி தட்டி சென்றது மற்றும்.
• இரண்டாம் பரிசு: ரூபாய் 15,000 மற்றும் வெற்றிக்கோப்பையை – QFCC அணி தட்டி சென்றது.
• மூன்றாம் பரிசு: ரூபாய் 10,000 மற்றும் வெற்றிக்கோப்பையை – Black Squad அணி தட்டி சென்றது.
• நான்காம் பரிசு: ரூபாய் 5,000 மற்றும் வெற்றிக்கோப்பையை – Karur Diamond Sports Academy (KDSA) அணி தட்டி சென்றது.
சிறப்பாக விளையாடியவர்களுக்கு
• Best Batsman – QFCC அணியில் ப்ரகாஷ்,
• Best Bowler – Fire Drops அணியில் குமரவேல்,
• Best All Rounder – Black Squad அணியில் துளசி வழங்கப்பட்டது.
பங்குபெற்ற அனைத்து அணிகளுக்கும் Cosco கம்பனி சார்பாக ஐந்து பந்துகள் வழங்கப்பட்டது. நிகழ்வின் தலைவர் ஜீவாநந்தன், மயில்சாமி, உத்ராபதி, JCI கரூர் டையமண்டு தலைவர் நாகராஜன், செயலாளர் மணிகண்டன், சுரேஷ் மற்றும் கமாலுதின் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர்கள் சந்தோஷ், கணேஷ்,வெங்கடேசன், ரமேஷ், கரிகாலன் நந்தகுமார், முருகேசன், நடராஜன், சதாசிவம், ராஜேஷ்குமார், ரமேஷ், சுப்பிரமணி,பாலசுப்பிரமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சூரியநாராயணன் AVS & AVR, தீபம் சங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.