டிச.5.
கரூர் தளவாபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. கல்லூரியில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்பது தொடர்பாகவும், வரி பாக்கியை வசூலிப்பது தொடர்பாகவும், சீல் வைப்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை, வருவாய்த்துறை, போலீசார் வந்தனர். அப்போது மாணவர்கள் வாயில் முன்பு நின்று கொண்டிருந்தனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்களை நிற்க வைத்து அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதாக புகார் எழுந்தது. நிர்வாகம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அந்த நிலத்தை மீட்கும் கடமையை செய்ய வந்த அதிகாரிகளை தடுப்பதற்கு மாணவர்களை வெளியே நிற்க வைத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தால் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் ஏன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அதற்கு குத்தகை பாக்கி செலுத்தாமல் இருக்கும் இரண்டாவது கல்வி நிறுவனம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.