ஜூன்.15.
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார் பின்னர் அவர் கூறியது-
தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவர் சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்”
“பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்.
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது. தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக கூறினார் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.