நவ.4.
வேலூர் பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் ஷோபனா என்பவரது வீட்டில் வேலூர் விஜிலென்ஸ் டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர் .இதில் ரூ 2.27கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெள்ளி தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது . ஓசூரில் உள்ள வீட்டில் கட்டுகட்டாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதும் இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கட்டுக்கட்டான பணத்துடன் போலீசார் நிற்பது போன்ற படம் வெளியாகியுள்ளது .
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சொத்துக் குவித்த அதிகாரிகளின் பட்டியல், போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளனர் . லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால் சொத்து குவித்த அதிகாரிகள் அரண்டு போய் கிடக்கின்றனர்.