ஏப்13.
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டும்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம். அனைத்து வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 Level of Pay ரூ.3000- 9000) ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்கவேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. -க்குள் இருக்க வேண்டும்.( ஊராட்சி குக்கிராமம் வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).
மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளோர் மட்டும் உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
- குறைவான பார்வை திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் பார்வைசரிசெய்யப்பட்டது)
- காதுகேளாதோர் (கருவி பொறுத்தப்பட்டவர்).
- உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
- குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் கைகளின் முழுசெயல்பாட்டு திறன் உணர்திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது)
- திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்
- குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)விதவைகள். கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் https//karur.nic.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் சமரப்பிக்கவும். அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சனிக்கிழமைகளில் (19.04.2025 மற்றும் 26.04.2025 ) மட்டும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.26.04.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளபட மாட்டாது. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்.
- பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
- SSLC மதிப்பெண் சான்றிதழ்.
- குடும்ப அட்டை
- இருப்பிட சான்று.
- ஆதார் அட்டை.
- சாதிச்சான்று
- விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ். 8. மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்
போன்றவற்றின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அஞ்சல்துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். உரிய சான்றிதழ்கள் இணைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை ரத்து செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் திருத்துவதற்கும் கெடு தேதியினை நீட்டிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு உரிமை உண்டு என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.