டிச.25.
கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா குப்பம் ஊராட்சியில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், வழக்கறிஞர்கள் சண்முகம் ,நன்மாறன், அமைப்புகளின் நிர்வாகிகள் விஜயன், சண்முகம் ,கவிக்குமார், குப்புசாமி, சரவணன், ராகவன், வடிவேல், மோகன்ராஜ் ,தென்னரசு, செல்வராஜ், தமிழ் கவி, உள்ளிட்ட விவசாயிகள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் முகிலன் கூறியது-
கல்குவாரி முறைகேட்டை தட்டி கேட்ட விவசாயி ஜெகநாதன் கொலை செய்யப்பட்ட குப்பம் கிராமத்தில் இரண்டு கல் குவாரி அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் வீடுகள் உள்ளன மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கல்குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கையை முன் வைத்தோம். குவாரியில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்தார். உரிமையாளர் இன்னும் கைது செய்யப்படவில்லை . என் டி சி கல் குவாரி நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். அபிடவிட்டில் அதன் உரிமையாளர் பொய்யான தகவலை கொடுத்து அதற்கு கிராம நிர்வாக அலுவலரும் அறிக்கை கொடுத்துள்ளார். இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்
கடந்த கால ஆட்சியில் மாவட்ட வருவாய் அலுவலரையே கல்குவாரி உரிமையாளர்கள் சிறை வைத்து போலீஸ் வந்து மீட்டெடுத்தது இன்று வரை அவருக்கு இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.