டிச.7.
இந்தியா தலைமை ஏற்று இருப்பதால் ஜி 20 மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அனைத்து கட்சி கூட்டத்திற்கான கடிதம் மத்திய அரசு சார்பில் கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டது . கூட்டத்தின் நோக்கம் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு கடைசியில் அந்தந்த கட்சி தலைவர்களின் பெயருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் அதிமுக இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி என டெல்லி ஏற்றுக்கொண்டு விட்டது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர் . ஓபிஎஸ் க்கு க்கு இது பின்னடைவு என கூறி வருகின்றனர்.
ஓ பன்னீர்செல்வம் கடித விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . பாராளுமன்ற விவாகரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அனுப்பிய கடிதத்தில், அதிமுக தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. அவர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காது நடந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார் . மேலும் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என அறிவித்திருப்பது துரதிர்ஷ்டம். எடப்பாடி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓ பன்னீர்செல்வம் அணியினர் டெல்லியில் விசாரித்தபோது தம்பி துரை தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மூத்த பத்திரிகையாளர்களும் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்கள் கூறுகையில், ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்து நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டு விட்டது. கரூரில் எம்பியாக இருந்தவரும் தற்போது ராஜ்யசபா உறுப்பினருமான தம்பிதுரை தலையிட்டுள்ளார். தம்பிதுரை கரூரில் ஐந்து முறை தொடர்ந்து போட்டியிட்டும் உருப்படியாக எதுவும் செய்யாததால் மக்கள் வெறுப்பை சம்பாதித்து காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறார். தன்னைவிட ஜூனியர் ஆன எடப்பாடி பழனிச்சாமியை அணுகி ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டார். அதிமுக விவகாரங்களை தொடர்ந்து டெல்லியில் கவனித்து கொண்டிருப்பவர் தம்பிதுரை.
ஜெயலலிதா காலத்திலிருந்து டெல்லி விவரங்கள் அத்துப்படி. கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருந்தவர். மேலும் மக்களவையில் ஒரே உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரவீந்திரநாத்திற்கு எம்பி என்ற முறையில் அழைப்பு வரும் என எதிர்பார்த்திருந்தனர் அதையும் தம்பித்துரை தடுத்து விட்டார். இந்த கடித விவகாரத்தை மறைத்து யாருக்கும் தெரியாமல் செய்துவிட்டார். எடப்பாடி பெயர் போட்ட கடிதத்தை நவம்பர் மாதமே வாங்கிய அவர் இரகசியமாக வைத்துக் கொண்டார். இந்த தகவல் வெளியே தெரிந்தால் ஓபிஎஸ் அணியும் தங்களுக்கு இதுபோல் ஒரு கடிதம் வேண்டும் என கேட்கலாம். அல்லது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்காலபொதுச் செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பக்கூடாது என ஆட்சேபிக்கலாம் என்பதால் கமுக்கமாக வைத்துக்கொண்டார் என்றனர். தற்போது இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.