நவ.2.
தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு கலெக்டர்கள் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்கிறது. 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். முதல்வருடன் பேசிய பொதுமக்கள் அரசு துரித மாக செயல்பட்டு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்தனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், பேரிடர் மேலாண்மை ம முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், மேலாண்மை இயக்குனர் ராமன் உள்ளிட்ட அலுவலர்களுடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் அளித்த பதிலில், சென்னையில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அப்புறப்படுத்திக் கோண்டிருக்கின்றோம் என்றார். போன முறை இல்லாத அளவுக்கு தண்ணீர் எங்கேயும் பெரிய அளவில் இல்லை என கேட்டதற்கு , நான் சொல்லக்கூடாது அதை நீங்கள் சொல்கிறீர்கள் என்றார். தி.நகர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இல்லை சில இடங்களில் இருக்கிறது எனகூறியதைக்கேட்டு, அதிமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டு காலமாக சென்னையை மட்டுமல்ல தமிழ்நாட்டையே சீரழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதை சரி செய்ய வேண்டும் என்றால் ரொம்ப வருடம் ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒன்றை வருடத்திற்குள் முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.