மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
50,00,000.00 கோடி ரூபாய் இந்திய ஒன்றியம் பட்ஜெட். வருவாயில்,11 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி (22%)
9 லட்சம் கோடி GST (18%) வரி
12 லட்சம் கோடி (24%) அரசு கடன் வாங்குகிறது.
32 லட்சம் கோடி (64%) ரூபாய் ஏழை, நடுத்தர மக்களிடமிருந்து வசூல் மற்றும் கடன்.
ஒட்டு மொத்த வருவாயில் கார்ப்பரேட்டுகளின் பங்கு 8.5 லட்சம் கோடி (17%) மட்டுமே.
நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூபாய் 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு கொடுத்த பிறகும் 11 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30% இருந்து 22% ஆக குறைத்ததன் விளைவாக கார்ப்பரேட் வரி ரூபாய் 8 1/2 லட்சம் கோடி தான் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஷூரன்ஸ் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு, முழுவதுமாக வெளிநாட்டு முதலாளிகளுக்கு திறந்து விடப்படுகிறது. மொத்த பட்ஜெட் செலவில் 20% அதாவது 10 லட்சம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்துகிறது.
25 – 26 நிதிநிலை அறிக்கை அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை.
பெரும்பணக்காரர்களிடமிருந்து சொத்து வரியோ, வாரிசு வரியோ எதுவும் விதிக்கப்படவில்லை. சாமான்ய மக்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான அதீத வரியில் எந்த குறைப்பும் இல்லை. சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பினை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை. தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் படி மாதம் ரூபாய் 26,000 குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான “விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை” நிர்ணயிக்கப்படவில்லை.
விருப்பு வெறுப்பின்றி ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்கின்றேன். இந்த நிதி நிலை அறிக்கை 12 லட்சத்தை தாண்டி வேறு ஒன்றும் இல்லை.
சோமசுந்தரம்- எழுத்தாளர்.