ஜூன்.8.
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச மின்சாரம் சலுகைகளும் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.
வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்து, 2.18% உயர்வை மின் வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.