பிப்.28.
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு அதிமுக சேர்மன் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஒன்று குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2021ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி சார்பில் 8 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் 12 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதிக உறுப்பினர்கள் மெஜாரிட்டி இருந்தபோதிலும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. காரணம் பெண் வெற்றி பெறவில்லை. தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதிமுகவில் தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லாத நிலையில் திமுகவில் 5 தாழ்த்தப்பட்ட பெண் உறுப்பினர்கள் இருந்தனர்.
இதனால் திமுகவில் வெற்றி பெற்ற சந்திரமதி என்பவரை அதிமுகவினர் தங்கள் கட்சிக்கு இழுத்து அவரை தலைவராக்கிவிட்டனர்.
தற்போது திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுகவில் இருந்து 6 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்தது.அதிமுக மெஜாரிட்டி இழந்ததைத் தொடர்ந்து தலைவர் மீது கடந்த கூட்டத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இன்று குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த குழு கூட்டத்தில், சந்திரமதி மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தலைவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதனால் அதிமுக தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்படுவார்.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றதால், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.