ஜன..7.
கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியிலும் , திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி வேலன் செட்டியூர் பகுதியிலும், சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் கட்டணத்தை கறாக வசூல் செய்கின்றனர். ஃபாஸ்ட் டேக் முறையைக் கொண்டுவந்து உடனுக்குடன் வேகமாக பணத்தை அள்ளிக் குவிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் மெத்தனம் காட்டி வருகிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பராமரிப்பு பணியை செய்யாமல் உள்ள இத்துறைக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மெத்தனம்
இதனால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகனங்களும் பழுது ஏற்படுகிறது இதுகுறித்து சாலை பாதுகாப்பு குழுவின் தலைவரும் கரூர் மாவட்டகலெக்டருமான பிரபு சங்கருக்கு புகார்கள் சென்றன.
எச்சரிக்கை
கலெக்டர் வலியுறுத்தியும் இப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனையடுத்து, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் .இது குறித்து 10நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை கரூர் திட்ட மேலாளருக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார் .10 நாட்களுக்குள் பதில் அளிக்கத் தவறினால் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும் சுங்கச்சாவடியை ரத்து செய்யவும் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு பரிந்துரை நேரிடும் என எச்சரித்துள்ளார்..