டிச.31.
கரூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா , புத்தாண்டு நாளன்று இரவில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் எஸ்.பி கூறியிருப்பதாவது-
கரூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் வாகன தணிக்கை, மற்றும் ரோந்து பணிகளில் அதிகாலை வரை ஈடுபட உள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையிலும், அதிவேகமாகவும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தியும், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகன சாகசத்தில் (Bike race) ஈடுபட்ட இருசக்கர வாகனங்களை மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு. விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். தொடர்ச்சியாக சாலைகளில் வாகன சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் சமூக வலைதள கணக்குகளும் (Facebook, Instagram) தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவும், புத்தாண்டு நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான முறையில் கொண்டாட மாவட்ட எஸ்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.