பிப்.14.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தரகம்பட்டியில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தங்கவேல் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இக்கல்லூரி தரை தளம், முதலாம் தளம் மற்றும் இரண்டாம் தளம் என 4609 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் முதல்வர் அறை, அலுவலகம். நூலகம், பதிவறை, மாணவர் பயன்பாட்டு அறை, சுகாதார மையம், ஆண், பெண் ஆசிரியர்கள் அறை, வகுப்பறைகள், துறைத்தலைவர் அறைகள், ஆய்வகம். கருத்தரங்கு கூடம், கணினி அறை, ஆய்வகம், கழிப்பறைகள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தற்போது மாணவ மாணவியர்கள் 700 பேர் பயின்று வருகிறார்கள்.
உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், கடவூர் வட்டாட்சியர் தசெந்திரவள்ளி கலந்து கொண்டனர்.