டிச.30.
தமிழக அரசு வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் கரூர் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண்மை கல்லூரி அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. கரூரில் தற்காலிக இடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் விரைவில் புதிய வேளாண்மை கல்லூரியை முதல்வர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் வாங்கலில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய அமைச்சர் இதை குறிப்பிட்டு பேசினார்.