செப்.14.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வும் என மொத்தம் 8 அமர்வுகளில் நடைபெற்றது.
இந்த அமர்வுகளில் 1693 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1569 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13,77,22,117/-
தொகை வழங்கப்பட்டது.
இதனை முதன்மை மாவட்ட நீதிபதி .R. சண்முகசுந்தரம், துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் (பொறுப்பு) C.சொர்ணகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செய்திருந்தார்.