நவ.16.
56-ஆவது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. கரூர் கிளை சிறையில் சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
கிளை சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம், வரவேற்புரையாற்றினார். ஓவிய ஆசிரியர் கலைமுதுமணி துரைராஜ் ஓவியப்போட்டி குறித்து கருத்துரை வழங்கி நடுவராக செயல்பட்டார். வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் ஓவியப்போட்டியை துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். 32 சிறை இல்லவாசிகள் ஓவியப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நூலக வாரவிழா – பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பு உணர்வை ஊட்டும் வகையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களிடையே வட்ட அளவில் தனித்தனியாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி இன்று கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.