ஏப்.28.
புதுதில்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை நிதின் கட்கரி சிறந்த ஓட்டுநருக்கான விருது வழங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம், கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுநர் போதகர் ரவிச்சந்திரன் 27 ஆண்டுகாலம் முசிறி கிளையில் விபத்து இல்லாமல் சிறப்பாக பணி பரிந்தமைக்காக சிறந்த ஓட்டுநருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவ்விருது பெற்ற ஓட்டுனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனிடம் விருதைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
.உடன் துணை மேலாளர்(வணிகம், தொழில்நுட்பம்)சுரேஷ்குமார்) உதவி மேலாளர் (தொழில்நுட்பம்)சேகர், மற்றும் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உள்ளனர்.