செப்.27.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பல்வேறு Statistics கொள்ளையடித்த கும்பல், கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்றபோது நாமக்கல் போலீஸ் சிங்கம் பட பாணியில் சுத்தும் போட்டனர். துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தான். 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
நாமக்கல் பச்சாபாளையம் அருகே கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தினர். சோதனை நடத்த கதவை திறக்கும்போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த ஆசாமிகள் போலீசாரை பயங்கரமாக தாக்கினர். தப்பியோட முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். சிங்கம் பட பாணியில் நடு ரோட்டில் இந்த சண்டை நடைபெற்றது.
போலீஸ் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஏடிஎம்மில் பணத்தை இந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மூன்று ஏடிஎம் மட்டுமின்றி மற்றொரு ஏடிஎம் ஒன்றையும் அந்த கும்பல் அலெக்காக தூக்கி வந்துள்ளனர். கும்பல் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையில் வந்த அதிரடி படை போலீசார் கண்டெய்னர் வாகனத்தை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்தனர். இதில் அந்த வாகனத்தில் சொகுசு காரான புதிய இன்னோவா கார் ஒன்றும் குற்றவாளிகள் ஆறு நபர்கள் இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த காருக்குள் கத்தகதையாக ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளை மட்டும் போலீசார் தற்பொழுது வெப்படி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.