ஜன.7.
மதுரை கூடல் நகர் ரயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி 09 & 11 ஜனவரி, 2025 அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவில்- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.16321, நாகர்கோவிலில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும், விருதுநகர் கரூர் இடையே 09.01.2025 & 11.01.2025 ஆகிய தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும். இதனால் அந்த நாட்களில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ஆகிய இடங்களில் ரயில் வராது.
. ரயில் எண்.16322 கோயம்புத்தூர்
கோவையில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் 09.01.2025 & 11.01.2025 ஆகிய தேதிகளில் கரூர் விருதுநகர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இதனால், அந்த நாட்களில் பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய இடங்களில் ரயில் வராது. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.