மே.11.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 55வது லீக் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டோனி என்ட்ரியாகும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 8-வதாக டோனி களமிறங்கினார். அப்போது படையப்பா படபாடல் ஒலித்தது. அதில் குறிப்பிட்ட வரிகள் மட்டும் இடம் பெற்றது. பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா. மாலைகள் இட வேண்டாம் தங்க மகுடமும் தரவேண்டாம் தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே என்ற பாடல் வரிகள் டோனி நடந்து வரும் போது ஒலித்தது . டோனி டோனி என முழக்கமிட்டும், செல்போனில் டார்ச் லைட் அடித்து காட்டி மும் அவரது வருகையை ரசிகர்கள் கொண்டாடினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் சுற்றை நெருங்கி விட்டது. சி.எஸ்.கே. 15 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. டோனி மீதான எதிர் பார்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு விக்கெட் விழும்போது டோனி களம் இறங்குவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரோ 8-வது வரிசையில் தான் வருகிறார். சிக்சர்களாய் அடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் டோனி முன்னதாக களம் இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
நேற்றைய போட்டிக்கு பிறகு வர்ணனையாளர் முரளி கார்த்திக் இதே கேள்வியை டோனியிடம் கேட்டார். அதற்கு டோனி கூறுகையில், தனது பேட்டிங் வரிசையில் மாற்றம் இல்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதே எனது வேலை. இதற்காகத்தான் நான் பயிற்சி பெற்று வருகிறேன். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதில் விருப்பம் இல்லை. எனக்கு கிடைக்கும் சொற்ப பந்துகளை பவுண்டரிகளாய் மாற்றுவது தான் எனது வேலை. இதற்கேற்ப மற்ற வீரர்களும் நல்ல வகையில் பங்களிக்கிறார்கள். இதுவரை நல்ல பலனையே அளித்து வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்கிறார். இந்த ஸ்கோர் (167 ரன்) மனதில் கொண்டு விக்கெட்டுகளை எடுப்பதை காட்டிலும் பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்துங்கள் என பந்து வீச்சாளர்களிடம் கூறினேன். இன்னும் கூடுதலாக ரன்களை எடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 2-வது பாதியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக உதவியது. அதை முடிந்த வரையில் பயன்படுத்தினோம் என்றார்.
.