டிச.23..
கரூர் பாரம்பரிய கொசுவலை சங்க தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் செங்குட்டுவன், செயலாளர் செல்வதுரை, தங்கராஜ், செல்லப்பன், குப்புராவ், உள்ளிட்ட நிர்வாகிகள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது- அத்தியாவசிய பொருளில் இருந்த கொசுவலை துணியை ஜிஎஸ்டி ன்கீழ் கொண்டு வந்து துணிக்கு 5 சதவீதம் மூலப் பொருளுக்கு 18 சதவீதம் என மத்திய அரசு அறிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து தாராள வருகை
மூலப்பொருள் விலையும் உயர்வு
இந்த சூழ்நிலையில் மூலப்பொருள் கிலோ ரூ 95 லிருந்து 135 க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் சந்தையில் துணிகளை விற்க முடியாத நிலை உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் இதுவரை எங்கள் தொழிலுக்கு சுகாதாரத்துறையில் இருந்தோ, ராணுவ துறையில் இருந்தோ எந்தவிதமான சரக்கு கொள்முதல் செய்யப்பட வில்லை. இந்த விதமான சிரமங்களில் இருந்து எங்கள் தொழிலை காப்பாற்ற பழைய 5 விழுக்காடு முறையை தொடர்ந்து செயல்படுத்தி எங்கள் துணிகளை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் துணிகளை மிக குறைந்த விலையில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா மற்றும் கொசுவினால் ஏற்படும் வைரஸ்களில் இருந்து மக்களை காக்கும் கவசமாக இருப்பதால் உடனே மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.