• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Friday, November 14, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

karurxpress by karurxpress
April 9, 2025
in கரூர்
0
171
VIEWS

ஏப்.9.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/, மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400/. மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படுசிறது.

மேலும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ/-600. மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750/. மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000/. வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழி காட்டும் மையத்தில் பதிவு செய்து 31.03.2025 உடன் ஐந்தாண்டுகாலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒருவருடம் முடிவுற்ற பதிவுதாரர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும். இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வாயிலாக எவ்விதமான நிதி உதவி தொகையும் பெறுபவராக இருக்க கூடாது . மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையோர் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

சுயஉறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் வழங்கப்படும். இதுவரை உறுதி மொழி ஆவணம் கொடுக்காத நபர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுயஉறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

.

Related Posts

போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

by karurxpress
November 14, 2025
0

கரூர்‌.நவ.14. கரூர் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (TN...

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

by karurxpress
November 14, 2025
0

நவ.15 . கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- வடகிழக்கு பருவமழை...

குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

by karurxpress
November 14, 2025
0

நவ.15. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “நிறுவன அறங்காவலர் சாமியப்பர் நினைவு...

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

by karurxpress
November 14, 2025
0

கரூர். நவ. 14. 58 -ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (T E T) ஏற்பாடுகள்

November 14, 2025
பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கல்

பருவமழை காலம்: தென்னை மரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

November 14, 2025
குழந்தைகள் அறிவியல் திருவிழா

குழந்தைகள் அறிவியல் திருவிழா

November 14, 2025
தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

தேசிய நூலக வார விழா: சிறை வாசிகளுக்கு ஓவியப்போட்டி

November 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved