ஜூலை.7.
கல்விக் கடன்கள் பெற சிறுபான்மையினர் மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி நடப்பாண்டு முதல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன்கள் ரூ.5,00,000/- வரை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மேலும். ரூ.1,00,000- வரை எவ்வித பிணையம் இன்றியும் ரூ.1.00.000 முதல் ரூ.5,00,000 வரை தகுந்த பிணையத்துடனும் கல்விக்கடன் பெற்றிட இயலும்.
எனவே, கரூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய சீக்கிய புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதிகள்:
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று பள்ளி மாற்று சான்றிதழ் உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது செலான், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.