மே.9.
கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தேவைகள் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி ஆகியோர் தல ஆய்வு மேற்கொண்டனர். எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.